குட்டைப்பாவாடை அணிந்தால் என்ன? தொப்புள் தெரியும் சட்டை அணிந்தால் என்ன? மாணவியருக்கு ஆதரவாக கல்வித்துறை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சமீபத்தில் சுவிஸ் மாகாணங்கள் சில பள்ளிக்கு குட்டைப்பாவாடையும் தொப்புள் தெரியும் விதத்தில் சட்டையும் அணிந்து வரும் மாணவியருக்கும், குட்டையாக கால் சட்டை அணிந்த மாணவர்களுக்கும் ஒரு வித்தியாசமான தண்டனை அளித்ததன.

பள்ளிக்கு முறையாக உடை அணிந்து வராத மாணவ மாணவியருக்கு முழங்கால் வரை மறைக்கும் ஒரு நீள சட்டை அளிக்கப்பட்டது. அந்த சட்டையில், நான் முறையாக உடை அணிந்திருக்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.

ஆனால், இந்த தண்டனைக்கு பயங்கர எதிர்ப்பு உருவானது. மாணவ மாணவியரும் அவர்களது பெற்றோரும், பெண்ணிய அமைப்புகளும் இந்த தண்டனையை எதிர்த்து பள்ளிக்கட்டிடங்கள் முன்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அந்த சட்டைக்கு அவமானச் சட்டை என்று பெயரிட்டு, அதை அணியமாட்டோம் என மாணவ மாணவியர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Keystone

இந்நிலையில், வாட் மாகாண கல்வி மற்றும் இளைஞர் துறை தலைவரான Cesla Amarelle, மாணவிகள் இதை அவமானமாக கருதுகிறார்கள், ஆகவே இந்த தண்டனைக்கு தடை விதிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

இனி மாணவிகள் குட்டைப்பாவாடை அணிந்தால் என்ன தொப்புள் தெரியும் சட்டை அணிந்தால் என்ன? யாரும் கேட்க முடியாது!

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்