சுவிஸில் புகலிடம் கோருவருக்கு நேர்ந்த கதி! செய்தது யார்? பள்ளி மாணவர்களிடம் பொலிஸ் கிடுக்கிப்பிடி விசாரணை

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பிரபல சுற்றுலா தளத்தில் புகலிடம் கோருவோர் ஒருவர் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சுற்றுலா தளமான லோகார்னோ நகரிலே இத்தாக்குதல் நடந்துள்ளது.

தஞ்சம் கோருவோர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இச்சம்பவம் தொடர்பாக சூரிச் நகரைச் சேர்ந்த பள்ளி மாணவர்களிடம் பொலிசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதல் நடந்தபோது பள்ளி சுற்றுலா பயணத்தின் ஒரு பகுதியாக ஹொட்டிங்கனில் உள்ள பள்ளி மாணவர்கள் லோகார்னோவில் இருந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலைக் கண்டிப்பதாகவும் மற்றும் பொலிஸாருடன் முழுமையாக ஒத்துழைப்போம் என்று பள்ளி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்