உலகிலேயே தொழிலார்களுக்கு அதிகபட்ச ஊதியம் வழங்கும் நாடு எது தெரியுமா? வெளியான தகவல்

Report Print Santhan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்தில், குறைந்த பட்ச ஊதியமாக 25 டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இதுவே உலகிலே அதிகபட்ச உதியம் வழங்கும் நாடாக மாறியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில், வேலைகள் 12 மணி நேரம், 9 மணி நேரம், 8 மணி நேரம் என்று உள்ளன. இப்படி ஒவ்வொரு ஷிப்ட்டின் கணக்கை கொண்டு அவர்களுக்கு மாதந்தோறும், வாரந்தோறும் மற்றும் நேரக் கணக்கு என்றெல்லாம் சம்பளங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இப்படி எல்லாம் வேலை பார்த்தால் கூட, அந்தளவிற்கு ஒரு சில நாடுகளில் எதிர்பார்க்கும் அளவிற்கு சம்பளம் கிடைப்பதில்லை.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள தொழிலாளர்களுக்கு, ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்ச ஊதியமாக 25 டொலர், நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தான் தொழிலாளர்களுக்கு உலகிலே, வழங்கப்படும் அதிகபட்ச ஊதியம் ஆகும். இதன் மூலம் முழு நேர தொழிலாளர்கள் ஆண்டுக்கு, 49 ஆயிரத்திற்கு மேல் டொலர் சம்பளம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் கூட தொழிலாளர்களுக்கு, ஒரு மணி நேரத்தில் குறைந்த பட்ச ஊதியமாக 7.25 டொலர் தான் வழங்கப்படுகிறது. ஆனால் ஜெனிவாவில் அமெரிக்காவை விட, மூன்று மடங்கு அதிகமாக, குறைந்தபட்ச ஊதியமாக கொடுக்கப்படுகிறது.

இது தொடர்பான கருத்து கேட்பின் போது, ஜெனிவா மக்கள் குறைந்த பட்ச ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு 23 டொலர் வழங்குவதற்கு தங்கள் ஆதரவை அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்