சுவிஸ் தகவல் தொடர்பு துறையை பிளாக் செய்த ட்விட்டர்: காரணம்?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

‘உங்கள் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது - விதிகளை மீறுவோரின் கணக்குகள் முடக்கப்படும்’ சுவிஸ் தகவல் தொடர்பு துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இப்படி ஒரு செய்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே காணப்படுகிறது.

எதனால் இப்படி தங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்பதற்கு ட்விட்டர் விளக்கமோ அல்லது நோட்டீசோ அளிக்கவில்லை என்கிறது சுவிஸ் தகவல் தொடர்பு துறை.

செப்டம்பர் 28 முதலே எந்த ட்வீட்களையும் போஸ்ட் செய்ய இயலவில்லை என்கிறது சுவிஸ் தகவல் தொடர்பு துறை.

சுவிஸ் தகவல் தொடர்பு துறை, ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலிய மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் கணக்குகளை வைத்துள்ள நிலையில், அனைத்து கணக்குகளிலுமே இந்த பிரச்சினை உள்ளதாக அது தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரித்தால் ட்விட்டர் இன்று வரை பதிலேதும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளது சுவிஸ் தகவல் தொடர்பு அமைச்சகம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்