இனி சுவிஸ் குடிமக்கள் அடையாள அட்டையுடன் பிரித்தானியாவுக்குள் நுழையமுடியாது: ஒரே ஒரு விதிவிலக்கு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

அக்டோபர் 1, 2021 முதல், சுவிஸ் குடிமக்கள் பிரித்தானியாவிற்குள் தங்கள் சுவிஸ் அடையாள அட்டையைப் பயன்படுத்தி நுழையமுடியாது.

பிரித்தானியா அக்டோபர் 8 அன்று வெளியிட்டுள்ள நெறிமுறைகளின்படி, 2021ஆம் ஆண்டு, அக்டோபர் 1இலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சுவிஸ் குடிமக்கள் தங்கள் பாஸ்போர்ட்டை பயன்படுத்தித்தான் நுழையமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதி சுவிஸ் குடிமக்களுக்கு மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐஸ்லாந்து, நார்வே மற்றும் லெய்க்டென்ஸ்டைன் ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கும் பொருந்தும்.

ஒரே ஒரு விதிவிலக்கு, 2020 டிசம்பர் 31க்கு முன்பிருந்தே பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் சுவிஸ் குடிமக்கள் மட்டும், தொடர்ந்து தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழையலாம்.

அவர்கள் தங்கள் சுவிஸ் அடையாள அட்டைகளை 2025 டிசம்பர் 31 வரை பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழையலாம்.

குறுகிய கால பயணம் மேற்கொள்ளும் சுவிஸ் குடிமக்களுக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய விசா தேவையில்லை. அதாவது, குறுகிய கால வர்த்தகம் தொடர்பான பயணங்கள், கல்வி தொடர்பான பயணங்கள் அல்லது சுற்றுலா வருபவர்களுக்கு விசா தேவையில்லை.

அதே நேரத்தில், பணியாற்ற, கல்வி பயில அல்லது பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் குடும்பத்துடன் இனைந்துகொள்ள வருபவர்களுக்கு கட்டாயம் விசா தேவை. மட்டுமல்ல, அவர்கள் புலம்பெயர்தல் மருத்துவ உபகட்டணமும் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்