சுவிஸின் மிகப்பெரிய நகரத்தில் கொரோனா தீவரமாக பரவுவதற்கு இவர்கள் தான் முக்கிய காரணம்: மருத்துவர் முக்கிய தகவல்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிஸின் இரண்டாவது பெரிய நகரமான ஜெனீவாவில் கொரோனா தீவரமாக பரவுவதற்கு யார் காரணம் என்பது குறித்து அந்நகர மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.

அதிகரித்து வரும் நோய்த்தொற்று விகிதங்களால் சுவிஸில் மிக மோசமாக பாதிப்புக்குள்ளான பகுதியாக ஜெனீவா மாறியுள்ளது, இதானல் தான் கவலையடைந்துள்ளதாக அந்நகர மருத்துவர் லே டார்டின் கூறியுள்ளார்.

எதிர்வரும் சில வாரங்களைப் பற்றி தான் கவலைப்படுவதாக அக்லே டார்டின் கூறினார்.

ஆனால் இரவு விடுதிகள் மற்றும் பார்கள் உண்மையான பிரச்சினை அல்ல, ஏனெனில் அங்கு பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளன, தேவைப்பட்டால் வாடிக்கையாளர்களைக் கண்டறிய முடியும்.

முக்கிய பிரச்சினை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே கொரோனா நோய்த்தொற்று பரவுதல் தான்.

ஜெனீவா இரண்டாவது ஊரடங்கை தவிர்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன், ஆனால் இரண்டாவது ஊரடங்கு தேவையில்லை என்று உறுதியளிக்க முடியாது என அக்லே டார்டின் கூறினார். .

இதற்கிடையில், ஜெனீவாவின் இரவு கிளப்புகள் நிதி உதவி பெற உள்ளன. நகரில் உள்ள இரவு விடுதிகள் மற்றும் பார்களுக்கு அராசங்கம் 7 மில்லியன் பிராங்க நிதி ஒதுக்கியுள்ளது.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சராசரியாக 50 முதல் 70,000 பிராங்குகள் வரை வழங்கப்படும் என்று கருதப்படுகிறது. பதிலுக்கு, ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மாட்டேன் என்று கிளப்புகள் உறுதியளிக்க வேண்டும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்