கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நாடு கடத்தப்பட இயலாத புகலிடக்கோரிக்கையாளர்கள்: சுவிஸ் நீதிமன்றத்தின் வித்தியாசமான தீர்ப்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நாடு கடத்தப்பட இயலாத புகலிடக்கோரிக்கையாளர்கள் சுதந்திரமாக சுவிட்சர்லாந்தில் தங்கலாம் என சுவிஸ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

மாலியைச் சேர்ந்த ஒருவர் திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்த சூரிச் நீதிமன்றம் ஒன்று உத்தரவிடப்பட்டது.

ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவரை நாடு கடத்த இயலாத சூழல் ஏற்பட்டது. அப்படியானால், அவர் நாடு கடத்தப்படும் வரை, அவரை சிறையிலடைக்கவேண்டும் என அந்த நீதிமன்றம் உத்தரவிட, அந்த தீர்ப்பை மாற்றியுள்ளது லாசேனிலுள்ள பெடரல் நீதிமன்றம்.

சுயமாகவோ, கட்டாயத்தின்பேரிலோ அவரை அவரது நாட்டுக்கு அனுப்ப முடியாத சூழலில், அந்த மாலி குடிமகனை காவலில் அடைக்க முடியாது என தீர்ப்பளித்துள்ள பெடரல் நீதிமன்றம், அவர் சுதந்திரமாக சுவிட்சர்லாந்தில் வாழலாம் என தீர்ப்பளித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்