இது கடன்பட வைக்கும்... அரசின் கடும்போக்கு சரியல்ல: குமுறும் சுவிஸ் தந்தை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தனிமைப்படுத்தலை மீறி காலாற நடக்க சென்ற நபருக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தை சேர்ந்தவர் 44 வயதான அந்த நபர். ஒரு பிள்ளைக்கு தந்தையான இவர் கொரோனா தனிமைப்படுத்தலை மீறியதாக கூறி தற்போது 2750 பிராங்குகள் பிழை செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

சமீபத்தில், செர்பியாவுக்கு மனைவி மற்றும் மகனுடன் விடுமுறையை கழிக்க சென்றுள்ளா குறித்த நபர்.

இவர் சென்ற வேளையில் செர்பியாவில் கொரோனாவின் தாக்கம் கடுமையாக இருந்துள்ளது.

இதனால் சுவிஸ் திரும்பியதும், மண்டல நிர்வாகத்திடம் தமது நிலை தொடர்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

அவர்களின் பரிந்துரைப்படி, குறித்த நபர் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானார். ஆனால் தமக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதை உணர்ந்து,

குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள வனப்பகுதிக்குள் நடக்க சென்றுள்ளார். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு குடியிருப்பு திரும்பியவரை பொலிசார் வரவேற்றுள்ளனர்.

முறைப்படி எல்லம் நடக்க வேண்டும் என்பதாலையே, மண்டல சுகாதார அதிகாரிகளிடம் தாம் செர்பியாவில் இருந்து திரும்பியதாக அறிவித்ததாகவும், தற்போது தனிமைப்படுத்தலால் பணிக்கு திரும்ப முடியாமல் அந்த இழப்பையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில்,

தனிமைப்படுத்தலை மீறியதாக பிழை செலுத்த கோருவது கடும்போக்கான செயல் என அவர் குமுறியுள்ளார்.

பத்து நாட்கள் முடிவில், கொரோனா அறிகுறிகள் இல்லை என்பதாலையே, தாம் நடக்க சென்றுள்ளதாக கூறும் அவர்,

இது உண்மையில் தமக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும், பிழை செலுத்த நேரிட்டால் தாம் கடனாளியாக மாறும் நிலை ஏற்படும் என்றார்.

இருப்பினும் தண்டனை உத்தரவை வெறுமனே ஏற்றுக்கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்