சுவிட்சர்லாந்தில் மேலும் மூன்று மாகாணங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுகிறது! எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மேலும் மூன்று மாகாணங்களில் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சுவிட்சர்லாந்தில் தற்போது மேலும் மூன்று மாகாணங்களில் முகக்கவசங்கள் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இருக்கும் 12 மாகாணங்களில் ஏற்கனவே, சூரிச், பாஸல் சிட்டி, பிரிபோர்க், வலாய்ஸ், சோலோத்தர்ன், ஜெனீவா, நியூசெட்டல், வாட் மற்றும் ஜூரா ஆகியவை முகக்கவசம் கட்டாயம் என்ற விதிமுறைகள் உள்ளது.

இந்நிலையில், தற்போது புதிதாக Zug, Ticino மற்றும் Bern ஆகிய மாகாணங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படவுள்ளது.

Zug

இங்கு நாளை முதல், விற்பனை நிலையங்கள், வணிக மையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் முகக்கவசம் கட்டாயம்.

இந்த நடவடிக்கை மத்திய சுவிட்சர்லாந்தில் ஷாப்பிங் செய்யும் போது கட்டாயம் தேவைப்படும். குறிப்பாக, உணவகங்களின் ஊழியர்களும் அக்டோபர் 12-ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டும்.

சிகையலங்கார நிலையங்கள், டாட்டூ ஸ்டுடியோக்கள், ஒப்பனை ஸ்டுடியோக்கள் மற்றும் மசாஜ் பார்லர்களின் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 22 முதல் Zug முகக்கவசம் கட்டாயமாக்கப்படுகிறது.

Bern

அக்டோபர் 12-ஆம் திகதி திங்கள் முதல், பெர்னில் பொதுவில் அணுகக்கூடிய அனைத்து உட்புற பகுதிகளிலும் முகக்கவசம் அணிய வேண்டும்.

பொதுவில் அணுகக்கூடிய அனைத்து உட்புற பகுதிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். கடைகள் மற்றும் ஷாப்பிங் மையங்கள், தபால் நிலையங்கள், அருங்காட்சியகங்கள், தியேட்டர்கள், நூலகங்கள், நிர்வாக கட்டிடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மத வகுப்புவாத அறைகள், சினிமாக்கள் மற்றும் இரயில் நிலையங்கள் மற்றும் தளங்கள் அண்டர்பாஸ் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

பார்கள், கிளப்புகள், டிஸ்கோக்கள் மற்றும் நடன அரங்குகள், உணவகங்களில் விருந்தினர்கள் ஒரே மேஜையில் அமர்ந்திருக்கும்போது மட்டுமே முகக்கவசங்களை கழற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ticino

சுவிஸில் இந்த மாகாணம் கொரோனா விஷயத்தில் மிகப் பெரிய வெற்றியாக இருந்துள்ளது. இருப்பினும் வேறு இடங்களில் புதிதாக பரவும் கொரோன தொற்று காரணமாக, நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நேற்று, அதாவது சனிக்கிழமை முதல் கடைகள் மற்றும் ஷாப்பிங் மையங்களில் முகக்கவசம் தேவைப்படும் என்று ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்