சுவிஸில் கொரோனா இரண்டாவது அலைக்கு தாங்காது: திவாலாகும் சூழல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இரவு விடுதி உரிமையாளர்கள், இனி தங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சுவிஸில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு விடுதிகளில் மக்களின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.

கடுமையான விதிகளால் மக்கள் கூட்டம் இரவு விடுதிகளை நாடாத நிலையில், திவாலாகும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக முக்கிய பகுதிகளில் செயல்பட்டுவரும் இரவு விடுதிகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 7 மாதங்களாக போதிய வருவாய் இல்லை என கூறும் பிரபலமான இரவு விடுதி உரிமையாளர்கள், தற்போது கையிருப்பும் கரையும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

செயல்பாட்டில் உள்ள சில இரவு விடுதிகளில் குறைவான ஊழியர்களே, கழிவறை சுத்தம் செய்வதில் இருந்து அனைத்து பணிகளையும் மேற்கொள்வதாக கூறுகின்றனர்.

சூரிச் பகுதியில் செயல்படும் பாதிக்கும் மேற்பட்ட இரவு விடுதிகள், இந்த ஆண்டு இறுதி வரையேனும் தாக்குப்பிடிக்குமா என்பது சந்தேகமே என முக்கிய நிர்வாகிகள் தரப்பு தெரிவிக்கின்றனர்.

இரவு விடுதிகள் மட்டுமின்றி, பார்ட்டிகளுக்கு செல்லும் மக்களும் ஒருவித அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்புக்கு இலக்காக நேருமா? அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம் என்பதால் இரவு விடுதிகளுக்கு மக்கள் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெர்ன் மண்டலத்தில் இந்த வார இறுதியில், இரவு விடுதி மற்றும் மதுபான விடுதிக்கு சென்ற இருவரால், மொத்தம் 1,500 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்