சுவிட்சர்லாந்தில் பிரமாண்ட காரை திருட முடிவு செய்த இளம்பெண்: அதன் பின் நடந்த சம்பவத்தின் பின்னணி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மதுபான விடுதி ஒன்றிற்கு சென்றிருந்த ஒரு இளம்பெண், விடுதிக்கு முன் ஒரு அதிநீள ஆடம்பர கார் ஒன்று நிற்பதைக் கண்டுள்ளார்.

Sankt Gallen மாகாணத்தில் நடந்த இந்த சம்பவத்தில், நைசாக அந்த லிமோசின் காரின் சாவியை திருடிய அந்த 22 வயது பெண், காரை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றுள்ளார்.

ஆனால், அந்த காரை ஓட்டி அவருக்கு பழக்கமில்லாததால், அந்த விலையுயர்ந்த காரை அவர் திருப்ப முயலும்போது அது மின்கம்பம் ஒன்றில் மோதியுள்ளது.

பொலிசார் வந்து அந்த பெண்ணை விசாரித்தபோது, அவருக்கு ஓட்டுநர் உரிமமும் இல்லை, அவர் போதையிலிருந்ததால் கார் ஓட்டும் நிலையிலும் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றாலும், கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த ஆடம்பர கார் சேதமடைந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Stapo SG

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்