சுவிஸில் இரவு நேர பேருந்து பயணிகளுக்கு மகிழ்வான செய்தி: மிக விரைவில் அமுல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லூசர்ன் நகரில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இனி இரவு நேர பேருந்து சேவைகள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

லூடர்ன் நகர போக்குவரத்து நிர்வாகம் செவ்வாய்க்கிழமை இது தொடர்பில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போதைய சூழலில் லூசர்ன் நகர பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சேவைகளும் குறைவாக இருப்பதாகவும் ஒப்புக்கொண்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய கட்டண விபரங்களை வெளியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், இரவில் அதிக கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்வதாகவும், பகலில் மட்டும் பயன்படுத்தக்கூடிய பயண அட்டைதாரர்கள் இரவிலும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் ஒற்றைப் பயணச் சீட்டு பயன்படுத்துவோரை இரவிலும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

மேலும், இரவு நேர பேருந்துகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள போக்குவரத்து நிர்வாகம்,

பொதுவாக 75 நிமிடங்களுக்கு ஒருமுறை என இருந்த பேருந்து சேவை இனி 30 அல்லது 60 நிமிடங்களுக்கு ஒருமுறை என நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.

இச்சலுகைகள் அனைத்தும் எதிர்வரும் டிசம்பர் 2021 முதல் அமுலில் வரும் எனவும் நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

அதுவரையான காலகட்டத்தில் தற்போது அமுலில் இருக்கும் அனைத்து சலுகைகளும் செல்லுபடியாகும் எனவும் லூசர்ன் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்