சுவிஸில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டதன் பின்னர் இளையோர் எதிர்கொள்ளும் சிக்கல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
516Shares

சுவிஸில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டதன் பின்னர் இளம் வயதினர் பெரும்பாலானோர் தங்களின் முகத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை கவலையுடன் பட்டியலிட்டுள்ளனர்.

கொரோனா பரவல் இதுவரை கட்டுக்குள் வராத நிலையில், பொதுவெளிகளில் மாஸ்க் கட்டாயம் என சுவிஸ் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மட்டுமின்றி, சுகாதாரமான மாஸ்க் அணிவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பெடரல் பொது சுகாதார அலுவலகம் கோரிக்கை வைத்துள்ளது.

மாஸ்க் அணிவது நமது பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமின்றி, நம்மால் பிறரும் பாதிக்கப்படால் இருக்க வழி செய்கிறது.

ஆனால் தற்போது, தொடர்ந்து மாஸ்க் பயன்படுத்துவதால், இளம் வயதினர் பலர், தங்கள் முகத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை கவலையுடன் பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து மாஸ்க் பயன்படுத்துவதால், அதில் படியும் அசுத்தங்கள் மற்றும் துகள்களால் முகத்தில் வீக்கம் காணப்படுவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி பெரும்பாலானோர் முகத்தில் அதிகமான பருக்கள் காணப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

19 வயதான சூரிச் இளம் பெண் ஒருவர், மாஸ்க் கட்டாயப்படுத்தப்பட்டதன் அடுத்த சில நாட்களில், தமக்கு தோலில் பிரச்சனைகள் ஏற்பட காரணமாக அமைந்தது என்கிறார்.

நாளுக்கு 2 மணி நேரம் ரயில் பயணம் மேற்கொள்ளும் தம்மால், மாஸ்க் அணியாமல் பயணம் செய்ய முடியாத நிலையில், இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கிறார்.

மேலும் பணியிடத்தில் முழு நேரமும் மாஸ்குடன் புழங்கும் ஒருவர், தமக்கும் முகத்தில் பருக்கள் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டுமின்றி மாஸ்க் அணிந்துகொள்ளாத சில நாட்களில் முகம் பொலிவுடன் காணப்படுவதாகவும் அவர் கண்டறிந்துள்ளார்.

இறுக்கமாக மாஸ்க் அணிந்து கொள்வதால், குறிப்பிட்ட பகுதியில் உஷ்ணம் மற்றும் வியர்வையால், தோலில் மாற்றங்கள் நிகழ்வதாகவும், அதனாலையே பருக்கள் தோன்றுவதாகவும், தோல் நோய் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொரோனா பரவல், அதைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள், இவைகளால் பெரும்பாலான மக்கள் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்வதாகவும், அதுவும் முகத்தில் பருக்கள் தோன்ற காரணம் என்று சுவிஸ் தோல் நோய் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்