சுவிட்சர்லாந்து ஐரோப்பாவின் கொரோனா மையப்புள்ளியாக மாற இது தான் காரணம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
612Shares

உலகம் முழுவதும் கொரோனா தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் சுவிஸ் மாகாணம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட இசை நிகழ்ச்சி ஒன்றுதான், சுவிட்சர்லாந்து ஐரோப்பாவின் கொரோனா மாறக் காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாத இறுதியில் சுவிட்சர்லாந்தின் Schwyz மாகாணத்தில் yodeling என்னும் இசை நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.

ஆனால், சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டாலும், மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்படவில்லை.

ஆனால், நிகழ்ச்சி முடிந்து ஒன்பது நாட்களுக்குப் பிறகு பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இப்போது அந்த பகுதியில் தொற்று அதிகரித்து, கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,238 ஆகியுள்ளது.

கடந்த புதனன்று மட்டுமே 94 பேருக்கு அப்பகுதியில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டது.

இதனால் அப்பகுதியிலுள்ள மருத்துவமனை நிரம்பி வழியும் நிலையில், தயவு செய்து மக்கள் மாஸ்க் அணியுமாறும், கூட்டங்கள் கூடுவதை தவிர்க்குமாறும் அந்த மருத்துவமனை மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மிக அதிக அளவில் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவமனை தலைவரான Franziska Foellmi என்பவர், தொற்று 30 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Schwyz மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பரவல், ஐரோப்பாவிலேயே மிக மோசமான அளவுடையதாகும் என்கிறார் அவர்.

கொரோனா பரவல் திடீரென பயங்கரமாக அதிகரித்துள்ளதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ள மாகாண அதிகாரிகள், 50 பேருக்கு மேல் கூடும் பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில், சமூக இடைவெளியை பின்பற்ற இயலாத சூழலில், மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்