அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சுவிஸ் மக்கள் வாக்களித்தால் இவர் தான் அமோக வெற்றிப்பெறுவார்: வெளியான கருத்துக் கணிப்பு

Report Print Basu in சுவிற்சர்லாந்து
1111Shares

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடம் முக்கிய வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இருவரில் சுவிஸ் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவு வெளியானது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2020 நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியை தக்க வைக்கும் குறிக்கோளுடன் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

டிரம்புக்கு சவால் விடுக்கும் வகையில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், சுவிஸின் முன்னணி வாக்குப்பதிவு நிறுவனமான காலப், அக்டோபர் 8 முதல் 15 வரை ட்ரம்பின் ஜனாதிபதி பதவி குறித்து நாடு முழுவதிலுமிருந்து 1000 சுவிஸ் மக்களை பேட்டி கண்டது.

பதிலளித்தவர்களில் 63 சதவீதம் பேர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்க ஜனாதிபதி ஆக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

13 சதவீதம் டிரம்பிற்கும், 24 சதவீதம் பேர் எந்த தகவலையும் அளிக்கவில்லை.

அதே சமயம், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 44 சதவீதம் பேர் மட்டுமே வெள்ளை மாளிகையில் மாற்றம் ஏற்படும் என நம்புகிறார்கள்.

மிகவும் பிரபலமற்ற அரசியல்வாதி பட்டியலில் துருக்கி தலைவர் ரெசெப் தயிப் எர்டோகன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் ஜனாதிபதி டிரம்ப் மிகவும் பிரபலமற்ற இரண்டாவது அரசியல்வாதி என்று கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

டிரம்ப் தான் உலகளவில் அமெரிக்காவின் நற்பெயரைக் கடுமையாக சேதப்படுத்தியதாக 76 சதவீதம் பேர் நம்புகிறார்கள், அவர் நாட்டிற்கு மோசமானவர் என்றும் நம்புகிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்