சுவிஸ் குடிமக்கள் அனைவர் வங்கிக் கணக்கிலும் பணம் போடும் திட்டம்: எவ்வளவு தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ஆளுக்கு 7,500 ப்ராங்குகள் போடும் திட்டவரைவு ஒன்று சுவிட்சர்லாந்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, சுவிஸ் தேசிய வங்கி, ஒவ்வொரு சுவிஸ் குடிமகனுக்கும் ஆளுக்கு 7,500 சுவிஸ் ப்ராங்குகள் வழங்கும்.

’Helicopter Money Initiative’ என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சுவிஸ் குடிமகனுடைய வங்கிக் கணக்கிலும் 7,500 சுவிஸ் ப்ராங்குகள் போடப்படும், சிறுவர்களுக்கும் கூட... சுவிட்சர்லாந்தின் நேரடி குடியரசு விதிகளின்படி, இந்த திட்டவரைவை முன்வைத்த அமைப்பாளர்கள் 100,000 கையெழுத்துக்களை பெறும் நிலையில், இத்திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

இந்த திட்டம் வெற்றி பெற்றால், அதற்காக 45 பில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் செலவாகும்.

இன்னொரு முக்கிய விடயம், இந்த தொகைக்கு வரி கிடையாது! இந்த திட்டம், பல பலன்களை அளிக்கும் என இத்திட்டத்தின் அமைப்பாளர்கள் வாதிடுகிறார்கள்.

இந்த திட்டத்தால், ஏற்றுமதி, வட்டி வீதம் மற்றும் முதலீடு முதலியவை அதிகரிக்கும் என அவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்