ஏமாற்றி ஓய்வூதியம் பெற்றுவந்த வெளிநாட்டவர்: அபராதத்துடன் நாடுகடத்த சுவிட்சர்லாந்து முடிவு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
11397Shares

தனக்கு சொத்து எதுவும் இல்லை என்று கூறி ஏமாற்றி சுவிட்சர்லாந்தில் ஓய்வூதியம் பெற்று வந்த வெளிநாட்டவர் ஒருவர் சிக்கியுள்ளார்.

மாதம் ஒன்றிற்கு 3,000 சுவிஸ் ப்ராங்குகள் வீதம் அவர் எட்டு ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் பெற்றுவந்துள்ளார்.

ஆனால், விசாரணை ஒன்றில், அவரது சொந்த நாட்டில் அவருக்கு நான்கு வீடுகள் இருப்பதும், அவரதுமகன் தனது தந்தையின் உதவியுடன் மேலும் இரண்டு சொத்துக்கள் வாங்கியுள்ளதும் தெரியவந்தது.

எல்லாவற்றிற்கும் மேல், 2017ஆம் ஆண்டு அவருக்கு லொட்டரியில் அரை மில்லியன் ப்ராங்குகள் பரிசு விழுந்திருப்பதும், அதை அவர் மறைத்துவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகவே, அவருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட இருப்பதுடன், சொந்த நாட்டுக்கு அவர் நாடுகடத்தப்படவும் உள்ளார்.

ஆனால், அதிகாரிகள் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை தெரிவிக்கவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்