வெளிநாட்டில் கைதான சுவிஸ் பெண்மணி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கைது செய்யப்பட்ட சுவிஸ் பெண்ணை விடுவிக்குமாறு சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 16 பேர் பெலாரஸ் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செப்டம்பர் 19ல் மின்ஸ்கில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிரான போராட்டங்களின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, குறித்த பெண்மணியை விடுவிக்க வலியுறுத்தி சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 16 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய கைது நடவடிக்கையானது, தன்னிச்சையானது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

சுவிஸ் மற்றும் பெலாரஸ் இரட்டை குடியுரிமை கொண்ட குறித்த பெண்மணி ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு பொலிஸ் அதிகாரியின் தொப்பியை பறித்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் கைதாகியுள்ள அவர் தற்போது 5 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

செப்டம்பரில் சுவிஸ் வெளிவிவகார அமைச்சகம் குறித்த கைது நடவடிக்கையை உறுதிசெய்ததுடன்,

போராட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை நிலைநிறுத்தவும் பெலாரஸ் நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.

ஆகஸ்டில், அரசாங்கத்திற்கு எதிரான தெருமுனை போராட்டங்களில் பங்கேற்றதாக மற்றொரு சுவிஸ் குடிமகன் கைது செய்யப்பட்டார்.

சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸின் தலையீட்டைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்