சுவிட்சர்லாந்தில் அணை ஒன்று திறக்கப்பட்ட நிலையில், அதை வேடிக்கை பார்க்க மக்கள் கூடினர்.
சுவிட்சர்லாந்தின் Fribourg மாகாணத்திலுள்ள Rossens அணை நேற்று திறக்கப்பட்டு அதிலிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
விநாடிக்கு சுமார் 8000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதைக் காண மக்கள் கூடினர்.
திறந்துவிடப்பட்ட தண்ணீர் பெருக்கெடுத்து Sarine நதியை சென்றடைந்தது. இப்படி அணை திறந்துவிடப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் நெருங்கி வருவதையடுத்து, ஆற்றை சுத்தமாக்கி தயாராக்குவதற்காக இப்படி செய்யப்படுகிறது.
கோடைக்காலத்தில் ஆற்றில் வண்டல் சேர்ந்துவிடுவதுடன் பாசியும் அதிகமாகிவிடும், ஆகவே, இப்படி அணை நீரை திறந்துவிட்டால், அது முழுவதும் அடித்துச் செல்லப்பட்டு ஆறு சுத்தமாகிவிடும். அது மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு உதவியாக இருக்கும்.
அணை திறந்து விடப்படுவதற்கு முன்பாகவே, ஆற்றின் கரையோரம் வாழும் மக்களுக்கு பெருவெள்ள அபாயமும் விடுக்கப்பட்டது.