இளம் வயதில் காதலி: சுவிஸில் கணவருக்கான பானத்தில் விஷம் கலந்த மனைவி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் பெண் ஒருவர் தமது கணவரின் காதல் விவகாரம் தொடர்பில் அறியவந்த நிலையில், அவருக்கான பானத்தில் விஷம் கலந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.

கொசோவோ நாட்டை பூர்வீகமாக கொண்டவர் அந்த 48 வயது செவிலியர் உதவியாளர். இவரையே, பானத்தில் விஷம் கலந்து கொல்ல திட்டமிட்டுள்ளார் இவரது மனைவி.

கடந்த 2018 ஏப்ரல் மாதம், தேன் மற்றும் திராட்சை சாறு கலந்த பானத்தில் 53 வயதான அந்த பெண்மணி விஷம் கலந்ததாக கூறப்படுகிறது.

அந்த பானத்தை குடித்த அவர், ஆழ்ந்த உறக்கத்தில் சென்றுள்ளார். ஆனால் காலையில் தமது கணவர் உயிருடன் இருப்பதை அறிந்த அந்த பெண்மணி, அவரை கழுத்தை நெரித்து கொல்லப்பார்த்துள்ளார்.

ஆனால் இந்த களேபரத்தால் அதிர்ச்சியடைந்த இவர்களது பிள்ளைகள் சத்தமிட்டதுடன், அறைக்குள் புகுந்து தடுத்ததால் அந்த நபர் உயிர் தப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், 48 வயதான அந்த நபருக்கு இளம் வயதில் ஒரு காதலி இருப்பது மனைவிக்கு தெரிய வந்துள்ளது.

அந்த நபருக்கு சொந்தமாக மூன்று குடியிருப்புகளும், சுமார் 170,000 யூரோ மதிப்பிலான நிலமும் சொந்த நாட்டில் உள்ளது.

இந்த நிலையில் தமது கணவர் தம்மை விவாகரத்து செய்துவிட்டு, பணத்தின் மீதான ஆசையால், அந்த காதலியுடன் வாழ முடிவு செய்துவிடுவாரோ என அஞ்சியுள்ளார் அவரது மனைவி.

இதனாலையே, தமது கணவரை கொல்ல திட்டமிட்டு, அவருக்கான பானத்தில் விஷம் கலந்துள்ளார்.

ஆனால், அது தூக்கத்திற்கான மாத்திரை எனவும், அளவுக்கு அதிகமாக கலந்து அளித்ததை அந்த பெண்மணி ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, இந்த தம்பதி அரசு உதவி பெறுவதில் முறைகேட்டு நடத்தியதாகவும், சூரிச் மண்டல நிர்வாகத்திடம் இருந்து சுமார் 33,000 பிராங்குகள் கைப்பற்றியதாகவும் வழக்குப் பதியப்பட்டது.

தற்போது இங்த தம்பதி தொடர்பில் நீதிமன்ற விசாரணை முன்னெடுகப்பட்டு வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்