சுவிட்சர்லாந்தில் திருட்டுப்போன விலையுயர்ந்த பொருள் பிரித்தானியாவில் மீட்பு: அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
2123Shares

சுவிட்சர்லாந்தில் திருட்டுப்போன 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விலையுயர்ந்த பூஜாடி ஒன்று லண்டனில் சிக்கியுள்ளது.

அதன் மதிப்பு 2.5 மில்லியன் பவுண்டுகள் ஆகும். லண்டனில் பொலிசார் நடத்திய ரெய்டு ஒன்றின்போது பொலிசார் அந்த பூஜாடியைக் கண்டுபிடித்தனர்.

அத்துடன், அந்த ஜாடி கிடைத்த வீட்டிலிருந்து போதைப்பொருட்களும் சில ஆயுதங்களும் கூட கிடைத்துள்ளன. கடத்தல் கும்பல் ஒன்று அதை சுவிட்சர்லாந்திலிருந்து திருடி வந்திருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

இது தொடர்பாக 42 மற்றும் 44 வயதுடைய இருவர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளனர். புராதான பெருமை வாய்ந்த அந்த பூஜாடியைப்போல் மற்றொரு ஜாடி கிடைப்பது அரிது.

விரைவில் அந்த விலையுயர்ந்த ஜாடி சுவிட்சர்லாந்திடம் ஒப்படைக்கப்படும் என பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

METROPOLITAN POLICE

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்