சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றின்போது கலைஞர் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பாரவையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
சூரிச்சில் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது, அந்தரத்தில் தொங்கியபடி ஒரு சர்க்கஸ் கலைஞர் பிடித்திருந்த கயிற்றை, தன் பல்லால் கடித்துப் பிடித்தபடி சுழன்று கொண்டிருந்தார் அவரது சக கலைஞர் .
எதிர்பாராதவிதமாக பிடி நழுவ, அந்த கலைஞர் உயரத்திலிருந்து தரையில் தொபீரென விழ, மக்கள் கூட்டம் பதறியது.
அவரால் உடனடியாக எழுந்து நிற்கமுடியவில்லை. அவரது தற்போதைய நிலை என்ன என்பது தெளிவாக தெரியாத நிலையில், அவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், அவர் நன்றாக இருப்பதாகவும் சர்க்கஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.