சுவிட்சர்லாந்தில் வார இறுதியில் இரட்டிப்பான கொரோனா தொற்று: நாளொன்றிற்கு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
1960Shares

சுவிட்சர்லாந்தில் கடந்த வார இறுதியில் மட்டும் 17,440 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சராசரியாக, நாளொன்றிற்கு 5,813 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த திங்கட்கிழமையைப் பொருத்தவரை, வார இறுதியில் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை (72 மணி நேரத்தில்)8,737ஆக இருந்தது, அதாவது இம்முறையைவிட பாதி மட்டுமே இருந்துள்ளது.

கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணம் உள்ளது. தற்போது சுவிட்சர்லாந்தில் 1,492 கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி (26, அக்டோபர் 2020) சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 121,093 ஆகும். இதுவரை சுவிட்சர்லாந்தில் கொரோனா 2,090 பேரை பலிவாங்கியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்