சுவிட்சர்லாந்தில் முகக் கவசம் தொடர்பான விதியை அரசாங்கம் கடுமையாக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் தற்போது வரை 1,21,093 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,111 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், முகக் கவசம் தொடர்பான விதிகளை கடுமையாக்குவது குறித்து ஆசோசித்து வருவதாக நாட்டின் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் கூறினார்.
மேலும், வெளிப்புறங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என குறிப்பிட்டார்.
இந்த விதி நகர்ப்புறங்களில் மட்டுமே பொருந்தும். ஆனால் நீங்கள் தெருவில் இருந்தால் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று பெர்செட் கூறினார்.

விஞ்ஞானிகள் தலைமையிலான தேசிய கொரோனா பணிக்குழு கூட முகக் கவசத்தை வெளிப்புறங்களில் அணிய பரிந்துரைக்கவில்லை.
பெர்செட்டின் பரிந்துரை கடுமையான விதிகளை அமல்படுத்துவதற்கு சில பகுதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என சில அரசியல் ஆய்வாளர்கள் கூறினர்.
இந்த நடவடிக்கைக்கு டிசினோ வைராலஜிஸ்ட் ஆண்ட்ரியாஸ் செர்னியின் ஆதரவு தெரிவித்துள்ளது. வெளிப்புறங்களில் ஆபத்து குறைவாக இருந்தாலும், நெரிசலான இடங்களில் முகக் கவசம் அணிவது இன்னும் நல்லது என கூறினார்.