சுவிஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக இரண்டு நாடுகள் எச்சரிக்கை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
1689Shares

விதிகளை மீறும் சுவிஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஜேர்மனியும் பிரான்சும் எச்சரித்துள்ளன.

ஜேர்மனியும் பிரான்சும், சுவிட்சர்லாந்தைவிட கடுமையான ஊரடங்கு விதிகளை அறிவித்துள்ளதுடன், எல்லை தாண்டும் சுவிஸ் பயணிகள் விதிகளை மதிக்கிறார்களா என்பதை உறுதி செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.

ஜேர்மன் உள் துறை அமைச்சரான Horst Seehofer, நாடு முழுவதும் உள்ள பொலிசார் எல்லைகளுக்கு அனுப்பட்ட இருப்பதாகவும், எல்லையிலிருந்து 30 கிலோமீற்றருக்குள் வந்துள்ள பயணிகள் விதிகளை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்வதற்காக அவர்களை சோதனையிடும் அதிகாரம் பொலிசாருக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி சுவிட்சர்லாந்தை அதிக கொரோனா அபாயம் உள்ள பகுதியாக கருதுவதால், சுவிட்சர்லாந்துக்குள் கண்டுபிடிக்கப்படும் சுவிஸ் குடிமக்கள் யாராக இருந்தாலும், அவர்கள் ஜேர்மனிக்குள் வந்ததற்கான சரியான காரணத்தை தெரிவிக்காவிட்டால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

பிரான்சைப் பொருத்தவரை, நாடு நாளை முதல் முடக்கப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். அதாவது, சுவிட்சர்லாந்து மக்கள் இனி எல்லை தாண்டி பிரான்சுக்குள் ஷாப்பிங் செல்ல முடியாது!

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்