சுவிட்சர்லாந்தில் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிவதாகவும், நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் பலருக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதால் மக்கள் பரபரப்படைந்தனர்.
குறிப்பாக சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளில் வாட்ஸ் ஆப் மூலமாகவும் குறுஞ்செய்திகளாகவும் இந்த செய்தி பரவியுள்ளது.
ஆனால், அவை உண்மையில்லை, வதந்திகள் என தெரியவந்துள்ளது. உண்மை நிலவரம் என்னவென்றால், பல சுவிஸ் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகள் கிட்டத்தட்ட நிரம்பும் அளவில்தான் உள்ளன, ஆனால், நோயாளிகளைத் திருப்பி அனுப்பும் அளவுக்கு அவை நிரம்பி வழியவில்லை.
அத்துடன், ஒரு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பிவிட்டால், நோயாளிகள் படுக்கைகள் காலியாக இருக்கும் மற்றொரு மருத்துமனைக்கு அனுப்பப்படுவார்கள், அதுவும், அதே மொழி பேசும் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு... பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் பகுதிகளில் இப்படி செய்திகள் உலவுகின்றன என்றால், ஜேர்மன் மொழி பேசும் பகுதிகளில் கதை வேறு! அடையாளம் தெரியாத ஒரு ஆணும், ஒரு பெண்ணும், காப்பீட்டு பணத்தை ஏமாற்றி பெறுவதற்காக மருத்துவமனைகள் போலியாக கொரோனா இருப்பதாக தெரிவிப்பதாக வாட்ஸ் ஆப் செய்தியில் கூறுகிறார்கள்.
Schwyz மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளரான Nirmala Arthen, இந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்கிறார்.
தற்போதைய சூழலை பயன்படுத்தி பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்றார் அவர்.