கொரோனா நோயாளிகளால் திணறும் ஜெனீவா மருத்துவமனைகள்: நிலைமையை சமாளிக்க எடுத்துள்ள நடவடிக்கை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜெனீவா மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் திணறும் நிலைமையை சமாளிப்பதற்காக, சில நோயாளிகளை வேறு மாகாணங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவருகின்றன.

ஜெனீவா, கொரோனாவின் இரண்டாவது அலையை சமாளிப்பதற்காக, நோயாளிகள் சிலரை, சூரிச் மற்றும் பெர்னிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றிவருகிறது.

மலைகளில் சிக்கியுள்ளோரை மீட்பதற்கான மீட்பு நடவடிக்கைகளில் வழக்கமாக ஈடுபடுத்தப்படும் ஹெலிகொப்டர்கள், இப்போது கொரோனா நோயாளிகளை நாடு முழுவதும் சுமந்து செல்கின்றன.

ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனை, வார இறுதியில் நோயாளிகள் வரும் பட்சத்தில், அவர்களுக்கு படுக்கைகளை தயாராக வைத்திருப்பதற்காகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், அந்த மருத்துவமனை, தனது தீவிர சிகிச்சைப் பிரிவையும் விரிவாக்கம் செய்துவருகிறது.

நேற்று மாலை முதல் ஜெனீவாவில் 551 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த எண்ணிக்கை, கொரோனா முதல் அலையின்போது சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்