எங்கள் நாட்டில் கொரோனா பரவ இவர்கள்தான் காரணம்: சுவிட்சர்லாந்து மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நாடு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிரான்ஸ் மருத்துவர் ஒருவர் சுவிட்சர்லாந்து மீது கொரோனா பரவல் தொடர்பில் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

Lyon நகரைச் சேர்ந்த கதிரியக்கவியல் நிபுணரான Pierre-Jean Ternamian, பிரான்சிலிருந்து எல்லை தாண்டி சுவிட்சர்லாந்துக்கு பணிக்கு சென்று வருபவர்கள்தான் கொரோனாவை பரப்புவதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

பிரான்சைப் பொருத்தவரை, ஜெனீவாவுக்கு அருகில் உள்ள இரண்டு பகுதிகளில்தான் கொரோனா தொற்று அதிகம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார் அவர்.

எல்லை தாண்டி சுவிட்சர்லாந்துக்கு பணிக்கு செல்லும் பணியாளர்கள், சுவிட்சர்லாந்திலிருந்து கொரோனாவை பெற்றுக்கொண்டு பிரான்சுக்குள் வருவதுதான், பிரான்சில் தொற்று அதிகரிப்புக்கு பகுதியளவு காரணம் என்ற பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் Ternamian.

ஆனால், பிரான்சின் இந்த குற்றச்சாட்டை சுவிட்சர்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளார்கள்.

ஜெனீவா சுகாதாரத்துறையின் செய்தித் தொடர்பாளரான Laurent Paoliello, இந்த குற்றச்சாட்டு உண்மைத்தன்மை உடையதல்ல என்று கூறியுள்ளார். எல்லைக்கு இரண்டு பக்கங்களிலுமே கொரோனா தொற்று வீதம் ஒரே அளவில்தான் உள்ளது என்கிறார் அவர்.

ஜெனீவாவும், அதைச் சுற்றியுள்ள பிரான்ஸ் நாட்டின் பகுதிகளும் ஒரே ஊர் போல காணப்படுவதாகவும், எல்லைகளுடன் தொடர்பின்றி, இந்த பகுதியிலுள்ள மக்கள் அனைவருமே கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கிறார் அவர்.

அத்துடன், எல்லைகளைத் திறந்து வைப்பது அவசியம் என்று கூறியுள்ள Paoliello, கொரோனாவின் முதல் அலையின்போது எல்லைகள் மூடப்பட்டது பயங்கரமான ஒரு விடயமாக இருந்தது என்கிறார்.

125,000க்கும் மேற்பட்ட பிரான்ஸ் நாட்டு பணியாளர்கள் ஜெனீவா ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணி செய்கிறார்கள்.

சுகாதாரத்துறை உட்பட, உள்ளூர் பொருளாதாரத்திற்கு அவர்கள் மிகவும் அவசியம். ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களில் மட்டுமே, 60 சதவிகிதம் செவிலியர்களும் 9 சதவிகிதம் மருத்துவர்களும் எல்லை தாண்டி பிரான்சிலிருந்து வந்து பணி செய்பவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்