வெடிச்சத்தம் கேட்டதாக பொலிசாரை அழைத்த மக்கள்: சுவிட்சர்லாந்தில் தீப்பற்றி எரிந்த பள்ளி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வெடிச்சத்தம் கேட்டதாக சிலர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தத்தையடுத்து அங்கு தீயணைப்புவீரர்களும் பொலிசாரும் வந்தபோது பள்ளி ஒன்று தீப்பிடித்து எரிவதைக் கண்டுள்ளனர்.

நேற்று காலை, Vaud மாகாணத்திலுள்ள Begnins என்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ள நிலையில், அதற்கு யாரோ தீ வைத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். நல்லவேளையாக, இந்த தீவிபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், அந்த கட்டிடத்தில் வசித்துவந்த இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர்.

விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கடந்த வார இறுதியிலும் இதேபோல் தீவைப்பு முயற்சி ஒன்று நடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்