சுவிஸில் பாடசாலை செல்ல மறுக்கும் இளம் மாணவர்கள்... பட்டியலிடும் காரணங்கள்: அடம்பிடிக்கும் நிர்வாகம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கொரோனா பரவல் காரணமாக சுவிஸில் இளம் மாணவர்கள் பாடசாலை செல்ல மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், நிர்வாகங்கள் அடம்பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இளம் மாணவர்கள் பாடசாலை செல்ல வேண்டும் என்ற பெடரல் கவுன்சில் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதன் ஒருபகுதியாக, மாணவர்களுக்கு தொலைதூர கல்வி முறையை அனுமதிக்க வலியுறுத்தி சுமார் 30,000 பேர் இதுவரை கையெழுத்திட்டுள்ளனர்.

இதனிடையே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாடசாலை நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்ட மின் அஞ்சலில், மாஸ்க் கட்டாயம் என்பதும், மருத்துவர்களின் அனுமதியுடன் மாஸ்க் பயன்படுத்துவதை கைவிடலாம் எனவும், தேவையெனில் பாடசாலைக்குள் மாஸ்க் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் மாணவர்கள் தரப்பு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் வழக்கமாக பாடசாலைக்கு செல்ல அனுமதிப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக கல்வியாளராக செயல்படும் ஒருவர், மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதை கொரோனா காலம் தடுப்பது கவலைக்குரியது எனவும்,

இதே நிலை நீடித்தால் அது மாணவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்