கொரோனா தொற்றிய செவிலியர்களை பணி செய்ய அனுமதிக்கும் சுவிஸ் மாகாணம்: அதிர்ச்சியளிக்கும் முடிவின் பின்னணி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜெனீவா மாகாணம், கொரோனா தொற்றிய செவிலியர்களை பணி செய்ய அனுமதிக்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்துவருகிறது.

பொதுவாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், முதல் அறிகுறிகள் ஏற்பட்டபின் ஏழு நாட்களுக்கு பணிக்கு திரும்பமுடியாது.

ஆனால், அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு குறைவே என்று கூறியுள்ள ஜெனீவா சுகாதாரத்துறை அதிகாரிகள், அதைவிட, போதுமான பணியாளர்கள் இல்லாததுதான் இப்போதைக்கு பெரிய பிரச்சினை என்கிறார்கள்.

கொரோனா தொற்றிய செவிலியர்களை பணி செய்ய அனுமதித்தாலும், பணி இடைவேளையின்போது உணவு உண்ணும் நேரத்தில் காற்றோட்டமுள்ள தனி அறையில்தான் அவர்கள் உணவு உண்ணவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையில் 1,000க்கும் அதிகமான பணியாளர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் யூனியன்கள் இந்த புது விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த முடிவு, பணியாளர்களை மட்டுமின்றி நோயாளிகளையும் அபாயத்திற்குள்ளாக்கும் என்று கூறியுள்ளன யூனியன்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்