குழந்தைகள் மீது எதிர்மறையான தாக்கம்: சுவிஸில் மாஸ்க்கால் வேலையை இழந்த ஆசிரியர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

குழந்தைகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பாடசாலைக்குள் மாஸ்க அணிய மறுத்த ஆசிரியரின் வேலையை பறித்துள்ளது நிர்வாகம்.

சூரிச் ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஒருவர் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், தாம் பணிநீக்கம் செய்யப்பட்டதன் காரணம் இதுவாக இருக்கலாம் என அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த ஆசிரியர் வகுப்பறையில் மாஸ்க் அணிவதற்கு எதிராக பேசியதுடன், மாஸ்க் இல்லாமல் கற்பித்தலிலும் ஈடுபட்டுள்ளார்.

மாஸ்க் அணிந்துகொண்டு பாடம் நடத்துவது மாணவர்களுக்கு உளவியல் ரீதியான, எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, முகபாவனைகள் மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடு, பச்சாத்தாபம் காட்டுவது உள்ளிட்டவை உறவுகளைப் பேணுவதில் மிகவும் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்க் அணிந்து உணர்வுகளை மாணவர்களிடம் வெளிப்படுத்துவது கடினம் என சுட்டிக்காட்டியுள்ள அவர்,

இரண்டாவது மொழியாக ஜேர்மன் தெரிவு செய்துள்ள சிறார்களுக்கு நமது குரல் மட்டுமல்ல, உதட்டின் அசைவுகளும் முக்கியமாகும் என்றார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்