சுவிட்சர்லாந்தில் மர்ம நபர் மிட்டாய் கொடுத்து சிறுவனை கடத்தியதாக வெளியான செய்தியால் பரபரப்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில், மர்ம நபர் ஒருவர் மிட்டாய் கொடுத்து 12 வயது சிறுவன் ஒருவனை கடத்தி விட்டதாக வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் உண்மையில், Marly என்ற நகரில், காரில் வந்த மர்ம நபர் ஒருவர் 8 வயது சிறுவன் ஒருவனிடம் மிட்டாய்களைக் காட்டி ஆசை காட்டி, அவனை காரில் ஏறச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், அந்த சிறுவன் காரில் ஏறவில்லை. அந்த சிறுவன் பத்திரமாக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

என்றாலும், கடத்தல் முயற்சி நடந்ததைத் தொடர்ந்து, Fribourg பொலிசார், Marly நகரில் ரோந்து செல்வதை அதிகரித்துள்ளார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்