சுவிட்சர்லாந்தில் இரண்டு நாட்களில் 20 கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை பொலிசார் இறுதியில் கைது செய்துள்ளனர்.
சுவிஸில் St. Gallen மண்டலத்தில் அக்டோபர் மாத இறுதியில் இச்சம்பவங்கள் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 20 கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் இறங்கிய பொலிசார், இறுதியில் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் 24 வயதான இளைஞரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில் குறித்த இளைஞர் பொலிசாரிடம் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
கொள்ளையிட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பிராங்குகள் இருக்கலாம் எனவும் சுமார் 2,500 பிராங்குகள் அளவுக்கு சொத்து சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தற்போது தெரிவிக்கின்றனர்.
கைதாகியுள்ள அந்த 24 வயதான இளைஞர் மீது சொத்துக்களை சேதப்படுத்துதல், அத்துமீறல் மற்றும் போதைப்பொருள் சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, மேலதிக குற்றங்களுக்கு அந்த இளைஞர் காரணமாக இருக்க வாய்ப்புள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.