சுவிட்சர்லாந்தில் கருகிய நிலையில் ஆணின் சடலம்: விசாரணையில் வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வனப்பகுதி ஒன்றில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

St. Gallen மண்டலத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றமே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்படி, குற்றவாளியான 37 வயது செர்பியா நாட்டவருக்கு 16 ஆண்டுகள் சிறைவாசமும், தண்டனை காலம் முடித்து, 15 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு St. Gallen மண்டலத்தின் Pulvershaus பகுதிக்கு அருகே அமைந்துள்ள வனப்பகுதியில் முற்றாக கருகிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு, சடலமாக மீட்கப்பட்டவர் செர்பிய நாட்டவர் எனவும்,

41 வயதான அந்த நபர் செர்பியாவில் குத்துச்சண்டை வீரர் எனவும் தெரிய வந்தது.

இவர் தமது நாட்டவரான ஒருவருக்கு பணம் கடனாக அளித்து வந்துள்ளார். அந்த நபர் வாங்கிய பணம் மொத்தத்தையும் சூதாட்டத்தில் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, பணத்தை திருப்பித் தரவும் இல்லை என கூறப்படுகிறது. மேலும், அவர் குத்துச்சண்டை வீரர் என்பதால் பணத்தை கண்டிப்பாக மீட்டெடுப்பார் என இவருக்கு புரிந்தது.

இதனையடுத்து, அவரை கொலை செய்ய திட்டமிட்டு, வனப்பகுதியில் அழைத்துச் சென்று கொலை செய்து உடலை எரித்துள்ளார் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்