வெளிநாடு செல்லும் பயணிகளை குறிவைக்கும் தனியார் நிறுவனங்கள்: சுவிட்சர்லாந்து அரசு எச்சரிக்கை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தங்களுக்கு கொரோனா இல்லை என நிரூபித்தால்தான் சில நாடுகளுக்கு செல்லமுடியும் என்ற நிலை உள்ளது.

இதை பயன்படுத்திக்கொண்டு, சில ட்ராவல் ஏஜன்சிகள், பயணிகள் தாங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளும் கொரோனா பரிசோதனை கிட்களை விற்பனை செய்துவருகின்றன.

அந்த ஏஜன்சிகள் கொரோனா சோதனை கிட்களை மக்களிடம் கொடுத்துவிடும், அவர்கள் தங்களுக்கு தாங்களே மாதிரிகளை சேகரித்து அந்த ஏஜன்சிகளிடம் கொடுத்துவிடுவார்கள்.

அந்த ஏஜன்சிகள் பரிசோதனை முடிவுகளை சில மணி நேரத்தில் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துவிடும்.

ஆனால், இதில் அதிக அளவில் தவறு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

அத்துடன் இப்படி தனியார் ஏஜன்சிகளிடம் சோதனை செய்து கொண்டு செல்லும் முடிவுகளை பல நாடுகள் ஏற்றுக்கொள்வதில்லை என்றும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்