சுவிஸ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது? வெளியான உத்தியோகப்பூர்வ தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தொடர்பில் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி எப்போது முதல் பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி மற்றும் ஜேர்மானிய நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவின் பைஸர் நிறுவனம் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி தொடர்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில்,

நேற்று அமெரிக்காவின் இன்னொரு நிறுவனமான Moderna தாங்கள் உருவாக்கியுள்ள கொரோனா 94.5% பலன் தரக்கூடியது என அறிவித்துள்ளதுடன், குளிர்பதனப்பெட்டியில் ஒரு மாதம் வரை பாதுகாக்கலாம் எனவும் நம்பிக்கை அளித்துள்ளது.

இந்த நிலையில் Moderna நிறுவனத்திடம் இருந்து சுவிஸ் அரசாங்கம் 4.5 மில்லியன் டோஸ்களுக்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும்,

இன்னும் 7 மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு உறுதி அளித்துள்ளது.

மேலும் அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்திற்குள் சுவிட்சர்லாந்துக்கான கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைப்பதாக Moderna நிர்வாகிகள் தரப்பும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பைஸர் நிறுவனத்திடம் இருந்து 3 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்களுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,

அத்துடன் பிரித்தானியா மற்றும் ஸ்வீடன் நிறுவனமான Astrazeneca வசமிருந்து 5.3 மில்லியன் டோஸ்களை பெற இருப்பதாகவும் சுவிஸ் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்