தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டிய நபர்... பொலிசாரை அழைத்த மனைவி: விடாமல் துரத்திய மரணம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

தனது கணவர் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவதாக பொலிசாரை அழைத்தார் ஒரு பெண். ஆனால், பொலிசாரே அவரை சுட்டுக்கொல்லும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.

Aargau மாகாணத்தில் 68 வயது நபர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டுகிறார் என்று கூறி அவரது மனைவியாகிய 37 வயது பெண் பொலிசாரை அழைத்துள்ளார்.

ஆனால், பொலிசார் Suhr நகரிலுள்ள அந்த நபரின் வீட்டுக்குச் சென்றபோது, அவர், உங்களையெல்லாம் கொல்லப்போகிறேன் என்று கத்தியவாறே பொலிசாரை நோக்கி கத்தியுடன் முன்னேறியுள்ளார்.

ஆகவே, பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஐந்து முறை துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்டு சாகப்போவதாக கூறிய நபர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்