நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலில் சுவிஸ் நபர்: வெளிநாட்டில் சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

அவுஸ்திரேலியாவில் பணி நிமித்தம் குடியேறிய சுவிஸ் நாட்டவர் தற்போது, நாடுகடத்தப்படும் அச்சுறித்தலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது 37 வயதாகும் ஃபேபியோ என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பணி நிமித்தம் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் குடியேறியுள்ளார்.

ஆனால் 2019 ஆம் ஆண்டின் இறுதியில், ஃபேபியோவின் குடியிருப்பில் இருந்து ஏராளமான போதை மருந்து பொட்டலங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன்,

அவர் சுவிஸ் குடிமகன் என்பதால் உடனடியாக நன்னடத்தை சோதனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதனால் தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவர் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இதில் அவர் தோல்வியை சந்தித்தால், அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவில் பிறந்த ஃபேபியோ அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயரும் முன்னர் வரை சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் வசித்து வந்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்