சுவிட்சர்லாந்தில் வெறும் 16 சதவிகிதத்தினர் மட்டுமே உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
28 சதவிகிதம்பேர், தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்கள். மற்றவர்கள் இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள்.
ஆனால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என சுவிஸ் அரசு தெளிவாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெறுமனே தடுப்பூசி போடுவது குறித்த பிரச்சாரங்கள் செய்வதால் மக்கள் மனதை மாற்றிவிட முடியாது என கருதுகிறார் தொற்று நோயியல் நிபுணரான Andreas Widmer.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அல்லது கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என தெரியவந்தவர்களை மட்டுமே இனி வெளிநாடு செல்ல அனுமதிக்கவேண்டும் என்கிறார் அவர்.
அப்படி செய்தாலாவது, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவார்கள் என்பது அவரது கருத்து.