சுவிஸில் 1000 லிற்றர் குடிநீருக்கு ஒரு பிராங்க் கட்டணமாக செலுத்தும் பிரபல நிறுவனம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

உலகெங்கிலும் விற்கப்படும் ரெட் புல் பானத்தில் சரி பாதி கேன்கள் சுவிட்சர்லாந்தின் செயின்ட் கேலன் மண்டலத்தில் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் இந்த பானம் தயாரிக்க செலவாகும் தண்ணீருக்கு குறித்த நிறுவனம் செலவிடும் தொகை தொடர்பில் பரவலாக சந்தேகம் இது வந்தது.

தற்போது, அந்த நிறுவனம் தண்ணீருக்காக ஆண்டு தோறும் செலவிடும் தொகை தொடர்பில் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் செயின்ட் கேலன் மண்டலத்தில் உள்ள Widnau பகுதியில் செயல்படும் தனியார் ஆலையில் ஆண்டுக்கு 3 பில்லியன் கேன்கள் தயாரிக்கப்படுகின்றன.

இது உலகெங்கிலும் செலவாகும் ரெட் புல் டப்பாக்களில் சரி பாதி எண்ணிக்கை என கூறப்படுகிறது.

சுவிஸில் ரெட் புல் நிறுவனத்திற்கு சொந்தமாக ஆலை ஏதும் இல்லை என்றாலும், இங்குள்ள தனியார் ஆலைகளில் தங்களுக்கான தேவையை பூர்த்தி செய்கின்றனர்.

இந்த நிலையிலேயே, ரெட் புல் நிறுவனத்தின் தண்ணீர் விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடையே புரளி கிளம்பியது.

அதாவது ரெட் புல் நிறுவனம் மிக மலிவான விலையில் குடிநீரை கைப்பற்றுவதாகவும், முறைகேடில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் இந்த விவகாரத்தில் தெளிவான பதில் பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது.

Widnau பகுதி மக்கள் தற்போது 1000 லிற்றர் குடிநீருக்கு கட்டணமாக ஒரு பிராங்க் மட்டுமே செலுத்துகின்றனர்.

பெரு நிறுவனங்கள் தங்களின் தேவையை பொறுத்து பல ஆயிரம் லிற்றர் குடிநீரை உரிய கட்டணம் செலுத்தி வாங்குகின்றனர்.

இந்த நிலையில், ரெட் புல் பானங்களை சுவிஸில் தயாரிக்கும் நிறுவனமான Rauch கடந்த ஆண்டு 1000 லிற்றர் தண்ணீருக்கு 94 cents கட்டணமாக செலுத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சாதாரண பொதுமக்கள் 1000 லிற்றர் குடிநீருக்கு ஒரு பிராங்க் கட்டணமாக செலுத்தி வரும் நிலையில், ரெட் புல் நிறுவனம் செலுத்தும் இந்த கட்டணம் குறைவு தான் என விட்னாவ் நகராட்சி மன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்