என் பிள்ளையை சாவுக்கு ஒப்படைக்க முடியாது: நெஞ்சைப் பிசையும் சுவிஸ் தாயாரின் போராட்டம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பரம்பரை வியாதியுடன் உயிருக்கு போராடும் 5 வயது சிறுவனை மீட்க, பெற்றோர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் லூசர்ன் மண்டலத்தில் குடியிருப்பவர்கள் Zrary குடும்பம். இவர்களது 5 வயது மகன் Danyar என்பவரே, பரம்பரை வியாதியுடன் உயிருக்கு போராடி வருபவர்.

வெறும் மூன்றாண்டுகள் மட்டுமே இனி சிறுவன் Danyar உயிர் வாழ முடியும் என்ற அதிர்ச்சியான தகவலை மருத்துவர்கள் சிறுவனின் பெற்றோர்களிடம் தெரிவித்துவிட்டனர்.

கடந்த அக்டோபர் மாதத்திலேயே சிறுவன் Danyar-ன் உடல் நிலையில் இந்த திடீர் மாறுதல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவர்களை அணுகிய பெற்றோருக்கு, சிறுவன் Danyar-கு ALD எனப்படும் அரியவகை பரம்பரை வியாதி இருப்பது தெரிய வந்தது.

லூசர்ன் பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர்கள் தற்போது சிறுவன் Danyar-கு இரண்டு அல்லது 3 ஆண்டுகளே கால அவகாசம் அளித்துள்ளனர்.

மட்டுமின்றி, சிறுவனின் இந்த அரிய வியாதிக்கு உலகில் எங்கும் சிகிச்சை முறை இல்லை எனவும் மருத்துவர்கள் கை விரித்துள்ளனர்.

இதனிடையே, சிறுவனின் தாயாரிடம் இருந்தே இந்த வியாதி சிறுவனுக்கு கிடைத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,

பெண்களை அது அதிகமாக பாதிக்காது எனவும், உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது சிறுவன் Danyar-ன் தந்தை தமது அலுவலகத்தில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, முழு நேரமும் சிறுவனை பராமரிப்பதில் கவனம் செலுத்துகிறார்.

இதனிடையே ஜேர்மனியின் Leipzig நகரில் ஒரு மருத்துவர், சிறுவன் Danyar-ன் வியாதியை குணப்படுத்தலாம் எனவும், அறுவை சிகிச்சைக்கு தயாராகவும் நம்பிக்கை அளித்துள்ளார்.

மேலும், அந்த மருத்துவரின் பரிந்துரையால் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும்,

சிறுவன் Danyar நிரந்தரமாக பார்வை இழக்கவோ, காது கேளாமல் போகவோ வாய்ப்புள்ளதாகவும், பழைய நிலைக்கு திரும்புவது கடினம் எனவும் கூறப்படுகிறது.

மேலும், சுவிஸ் மருத்துவர்கள் இந்த செயல்முறை மிகவும் ஆபத்தானது என கூறியுள்ளனர்.

மட்டுமின்றி, தற்போது சுவிஸ் மற்றும் ஜேர்மன் நிபுணர்களிடையே சிறுவன் Danyar தொடர்பில் கருத்துப்பரிமாற்றம் நடந்து வருகின்றன.

அறுவை சிகிச்சையால் அதிக சிக்கல்கள் இருப்பது தெரியும் என்றாலும், மகனை சாவுக்கு ஒப்படைக்க மனம் இல்லை என்றே தற்போது சிறுவன் Danyar-ன் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்