சுவிட்சர்லாந்தில் பெண்மணி ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முன் மர்ம நபர் ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
1997ஆம் ஆண்டு, சூரிச் மாகாணத்திலுள்ள Küsnacht என்ற இடத்திலுள்ள தனது அடுக்கு மாடி குடியிருப்பில், Ella Christen (86) என்ற பெண்மணி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
Ella கொல்லப்பட்ட வழக்கில், 20 ஆண்டுகளாக குற்றவாளி சிக்காமலே இருந்தார். இதற்கிடையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் Thunஇலுள்ள நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை தொடர்பாக 77 வயது இத்தாலிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் Bernஇல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் அந்த இத்தாலியரிடமிருந்து DNA மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
ஆச்சரியத்துக்குரிய விதமாக, அந்த DNA, 20 ஆண்டுகளுக்கு முன் Ella கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளியின் DNAவுடன் ஒத்துப்போனது.
ஆக, Ellaவைக் கொலை செய்த நபரை பொலிசார் இன்னமும் வெளியில் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில், அவர் Bernஇல் சிறையில்தான் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது, சூரிச் பொலிசார், அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்கள்.