உறவை முடித்துக்கொள்ள விரும்பிய சுவிஸ் நபர்: பதிலுக்கு சீன பெண்மணி செய்த அதிர்ச்சி செயல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
254Shares

சுவிட்சர்லாந்தில் சீனத்து பெண்மணி ஒருவருடனான உறவை சுவிஸ் தொழிலதிபர் ஒருவர் முடித்துக்கொள்வதாக அறிவித்த நிலையில், குறித்த பெண்ணால் பாலியல் புகாருக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நீதிமன்ற விசாரணையில் முடிவுக்கு வந்துள்ளது.

சுவிஸில் கடந்த 2019, ஜனவரி மாதம் பாஸல் மண்டல குற்றவியல் நீதிமன்றம் தொழிலதிபர் ஒருவருக்கு துஸ்பிரயோக வழக்கில் 15 மாத நிபந்தனை சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது.

சம்பவம் நடந்த நேரத்தில் அந்த தொழிலதிபர் தங்கள் இருவருக்கும் பொதுவான குடியிருப்பில் குறித்த பெண்மணியின் விருப்பத்திற்கு எதிராக உடலுறவு கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், தமது முன்னாள் துணையான அந்த சீனத்து பெண்ணை கட்டாயப்படுத்தி வாய்வழி உறவுக்கு முயன்றதாகவும், ஆனால் அந்த பெண்மணி அதில் இருந்து தப்பிக்க தொழிலதிபரின் உறுப்பில் காயம் செய்ததாகவும் நீதிமன்ற விசாரணையில் கூறப்பட்டது.

இதனிடையே, தொழிலதிபருக்கு எதிரான தீர்ப்பில் மேல்முறையீட்டு நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியது.

மட்டுமின்றி, தொழிலதிபரின் உறுப்பில் காயம் மற்றும் குறித்த சீனத்து பெண்மணியின் முகத்தில் காயம் என்பதை தவிர இந்த குற்றச்செயலுக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் இல்லை என நீதிமன்றம் பதிவு செய்தது.

மேலும், சுவிட்சர்லாந்தில் தனது குடியிருப்பு நிலையை வலுப்படுத்துவதற்காக அந்தப் பெண் தொழிலதிபருடனான உறவைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினார் என்று நீதிமன்றம் கருதுகிறது.

தற்போது இந்த வழக்கில் தொழிலதிபருக்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில், விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவலில் பத்து நாட்களுக்கு 2000 பிராங்குகள் மற்றும் வருவாய் இழப்புக்கு 1500 பிராங்க் என வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்