நேர்மையின் மதிப்பு வெறும் 100 பிராங்குகளா? சுவிஸ் மக்களிடையே எழுந்த காரசார விவாதம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தவறவிட்ட ஒரு பணப்பையை கண்டெடுத்து நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்த நபர் தொடர்பில் தற்போது நாடு முழுக்க காரசார விவாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தின் அர்பன் நகரில் ஒரு கடைக்கு முன்பு தவறவிட்ட நிலையில் பை ஒன்றை Eduardt Latifi என்ற 26 வயது இளைஞர் கண்டெடுத்துள்ளார்.

அதில் அவர் பரிசோதிக்கையில் சுமார் 6,200 பிராங்குகள் தொகை இருந்துள்ளது. உடனே அந்த இளைஞர் நேர்மையாக அர்பன் நகர பொலிசாரை அணுகி நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு, பணப்பையையும் ஒப்படைத்துள்ளார்.

அது தமக்குரிய பணம் அல்ல என்பதாலையே, நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்ததாக அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பெண்மணி ஒருவர் அந்த பணப்பை தொடர்பில் உரிமை கொண்டாடவும், அதை உறுதி செய்த பொலிசார், குறித்த பெண்மணியை வரவழைத்து பணப்பையை ஒப்படைத்துள்ளனர்.

அர்பன் நகர பொலிசாரிடம் இருந்து பணப்பையை பெற்றுக்கொண்ட அந்த பெண்மணி குறித்த இளைஞருக்கு சன்மானமாக 100 பிராங்குகள் அளித்துள்ளார்.

தற்போது இச்சம்பவமே, சுவிட்சர்லாந்து மக்களிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் நேர்ம்சியின் மதிப்பு வெறும் 100 பிரான்குகள் தானா என கேள்வி எழுப்பியுள்ளனர். மட்டுமின்றி, இளைஞரின் நேர்மையை பாராட்டியதுடன், அந்த பெண்மணி மீது விமர்சனமும் முன்வைத்துள்ளனர்.

குறைந்தபட்சம் அவர் கண்டெடுத்த தொகையில் 10 சதவீதமாவது சன்மானமாக அளித்திருக்கலாம் என்றே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்