சுவிட்சர்லாந்தில் கத்தியால் குத்தப்பட்ட சிறுமி... நிருபரிடம் சிக்கிய ஆதாரம்: தலைகுனிந்த பொலிசார்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சிறுமி ஒருத்தி கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் குற்றவாளி சிக்கியும் பொலிசாருக்கு ஆதாரம் சிக்காத நிலையில், நிருபர் ஒருவர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைக் கண்டெடுத்ததால் பொலிசார் தலைகுனிய நேரிட்டது.

சுவிட்சர்லாந்தின் Solothurn பகுதியில் 14 வயது சிறுமி ஒருத்தி கத்தியால் குத்தப்பட்டாள். படுகாயமடைந்த அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் 37 வயது ஆண் ஒருவரை கைது செய்தனர். அத்துடன், குற்றம் நடந்த பகுதி என்று குறிப்பிட்டு ஓரு பகுதியை சுற்றிலும் பொலிஸ் டேப் ஒட்டி சீல் செய்திருந்தனர்.

அப்போது அங்கு செய்தி சேகரிக்க வந்திருந்த நிருபர் ஒருவர் இரத்தம் தோய்ந்த கத்தி ஒன்று, குற்றம் நடந்ததாக சீல் செய்யப்பட்ட பகுதிக்கு வெளியில் கிடப்பதைக் கண்டுள்ளார்.

அந்த சிறுமி தாக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஒரு கத்தியாகத்தான் இருக்கும் என்பதை கணிப்பதற்கான வாய்ப்பிருந்தும், அதை எப்படி பொலிசார் கவனிக்கத் தவறினார்கள் என தன்னால் புரிந்துகொள்ள இயலவில்லை என அந்த நிருபர் கூறியுள்ளார்.

அவர் அந்த கத்தியைக் குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்தபின் அவர்கள் அதை சேகரித்தனர்.

குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை சேகரிக்க தவறியதையடுத்து, Solothurn பகுதி பொலிசாருக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்