வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டம்: கட்டாயமாக்க சுவிட்சர்லாந்து திட்டம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
7000Shares

சுவிட்சர்லாந்தில் வீட்டிலிருந்தே வேலை செய்வதை கட்டாயமாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று வீதம் கட்டுக்குள் வந்துள்ளது என்றாலும், அது தொடர்வதையும், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைகள் மீண்டும் ஒரு கொரோனா தொற்று பரவலை உருவாக்கிவிடக்கூடாது என்பதையும் தான் உறுதி செய்ய விரும்புவதாக சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset தெரிவித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களுக்கு பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் எப்படி இயங்கவேண்டும் என்பது தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதுபோக, இன்னும் ஒரு படி மேலேபோய், வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதை கட்டாயமாக்க விரும்புகிறார் அவர்.

முன்பு அவர் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதை கட்டாயமாக்க எடுத்த முயற்சிகள் பெடரல் கவுன்சிலின் ஆதரவு கிடைக்காத்தால் தோல்வியில் முடிந்த நிலையில், இப்போது மீண்டும் அதையே முயற்சிக்கிறார் Alain Berset.

அவரது திட்டம் பெற்றி பெறும் பட்சத்தில், நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் வீட்டிலிருந்தபடி பணி செய்வதற்கான அனைத்து உதவிகளையும் கட்டாயம் செய்துகொடுக்கவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்