சுவிட்சர்லாந்தில் நூற்றுக்கணக்கான ஹொட்டல்கள் மூடப்படும் அபாயம்: கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சோகம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
262Shares

கொரோனாவின் தாக்கத்தால், சுவிட்சர்லாந்தில் நூற்றுக்கணக்கான ஹொட்டல்கள் மூடப்படும் அபாய நிலையில் உள்ளன.

சீக்கிரத்தில் நாட்டின் சூழல் பெருமளவில் மாறினாலொழிய, நூற்றுக்கணக்கான ஹொட்டல்கள் மூடப்படும் அபாயம் நிலவுவதாக கருதப்படுகிறது.

வழக்கமாக இந்த காலகட்டத்தில், கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் சிற்றி சென்டர்களுக்கு செல்வதால் ஹொட்டல்கள் மும்முரமாக இருக்கும். ஆனால், அவை இந்த ஆண்டு வெறிச்சோடிக் கிடக்கின்றன.

சுவிஸ் ஹொட்டல்கள் கூட்டமைப்பின் தலைவரான Andreas Zullig கூறும்போது, இந்த அளவுக்கு ஹொட்டல்களில் முன்பதிவு குறைவாக இருந்ததில்லை என்கிறார். சில ஹொட்டல்கள் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே நிரம்பியுள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.

நிலைமை முன்னேறுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று கூறும் Andreas Zullig, பல ஹொட்டல்கள், தங்கள் சேமிப்பிலிருந்த பணத்தையெல்லாம் எடுத்து செலவழித்துவிட்டன என்கிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்