தொழிற்சாலை பகுதியில் நுழைந்த பொலிசார்... சட்டவிரோதமாக இயங்கிவந்த விடுதி கண்டுபிடிப்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
287Shares

சுவிட்சர்லாந்தில் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கிவந்த சட்டவிரோத மதுபான விடுதி ஒன்றைக் கண்டுபிடித்த பொலிசார் அதற்கு சீல் வைத்தனர்.

Schwyz மாகாணத்தில், தொழிற்சாலைப் பகுதியில் சட்டவிரோத மதுபான விடுதி ஒன்று இயங்கிவருவதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். அங்கு சென்று பார்க்கும்போது, தொழிற்பேட்டை பகுதியில் கடந்த பல மாதங்களாக அந்த மதுபான விடுதி இயங்கிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிசார் சோதனையின்போது, அந்த மதுபான விடுதியில் 80க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அவர்கள் யாரும் சமூக இடைவெளியை கடைப்ப்பிடித்ததாகவோ மாஸ்க் அணிந்ததாகவோ தெரியவில்லை.

அத்துடன், ஒருவர் பொலிசாரையே மிரட்டியுள்ளார். அவர்தான் அந்த சட்டவிரோத விடுதியின் உரிமையாளர் என கருதப்படுகிறது. அவரையும், குடித்துவிட்டு கலாட்டா செய்த மற்றொருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், பொலிசார் யாராவது வருகிறார்களா என்பதை கண்காணிக்க அந்த மதுபான விடுதி உரிமையாளர் ஆங்காங்கே ஆட்களை நிறுத்திவைத்திருந்ததால், பொலிசார் வருவதையறிந்து சில வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்