மன்னியுங்கள்.... இலங்கையிலிருந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளிடம் மன்றாடிய பெடரல் கவுன்சில்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
1178Shares

இலங்கையில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்கப்பட்டதில் பெருவாரியாக, அதிகாரிகளின் தவறான நடத்தை அடையாளம் காணப்பட்ட நிலையில் பெடரல் கவுன்சில் தற்போது மன்னிப்பு கோரியுள்ளது.

கடந்த 1973 தொடக்கம் 1997 வரை இலங்கையில் இருந்து சுமார் 11,000 சிறுவர்கள் கேள்விக்குரிய சூழ்நிலையில் ஐரோப்பிய பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்டுள்ளது.

அதில் 700-கும் அதிகமான குழந்தைகளை சுவிஸ் பெற்றோர்கள் தத்தெடுத்துள்ளனர்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் குறித்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சுவிஸ் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் நோக்கமே, இந்த விவகாரம் தொடர்பிலான உண்மைத்தன்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதே.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளிலேயே முதலாவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம், குறித்த விவகாரம் தொடர்பில் அதிகாரிகளின் தவறான நடத்தையை அடையா:ளம் கண்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் சுவிஸ் மண்டலங்கள் உரிய நடவடிக்கை எடுக்க தவறியதற்கு பெடரல் கவுன்சில் தங்கள் வருத்தங்களையும் பதிவு செய்துள்ளது.

மேலும், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ நவடடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ள பெடரல் கவுன்சில்,

பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் உதவவும் தயார் என அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு...

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்